வண்ணத்தமிழ் விழா - 2026

28-Aug-2026

தமிழ் மொழியின் இனிமையையும் பாரம்பரியத்தையும் சிறார்களிடையே பரப்பும் நோக்கில் "வண்ணத்தமிழ் விழா" மிகச் சிறப்பாக நடைபெற்றது.

DATE : 29.08.2026                                                                                                                                                                 DAY: Saturday   
                                                வண்ணத்தமிழ்விழா" 2026 – ஒருமகிழ்வானதமிழ்ப்பயணம்

தமிழ்மொழியின் இனிமையையும் பாரம்பரியத்தையும் சிறார்களிடையேபரப்பும் நோக்கில் "வண்ணத்தமிழ் விழா" மிகச்                     சிறப்பாக நடைபெற்றது.

  • தமிழின்தொன்மையையும் இலக்கிய அழகையும் எடுத்துரைக்கும் "தமிழும் சிறப்பும்" எனும் பகுதியுடன் தொடர்ந்தது. மாணவர்கள் தமிழ் மொழி பற்றிய தங்கள் புரிதலையும் பற்றுதலையும் பேச்சு, பாடல், நடன வடிவங்களில் அழகாக வெளிப்படுத்தினர்.
  • "மரபுக்கூத்து" பகுதியில் மாணவர்கள் பாரம்பரிய நாட்டுப்புற நடன வடிவங்களை நிகழ்த்திக் காட்டி, பார்வையாளர்களை மெய்மறக்க வைத்தனர். "பார்ப்போம் ரசிப்போம்" பகுதி காட்சிப் பொருட்கள் மற்றும் நிகழ்த்துக் கலைகள் மூலம் தமிழ் பண்பாட்டை உற்று நோக்கும் வாய்ப்பை அளித்தது.
  • சிறுவயதிலேயே மேடைப் பேச்சுத் திறனை வளர்க்கும் நோக்கில் அமைந்த "பேச்சரங்கம்" பகுதியில் மாணவர்கள் தங்கள் தன்னம்பிக்கையையும் மொழி ஆளுமையையும் வெளிப்படுத்தினர். இறுதியாக "விளையாட்டு சங்கமம்" பகுதி மூலம் கற்றலுடன் கூடிய மகிழ்ச்சியான தருணங்களை மாணவர்கள் அனுபவித்தனர்.